ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் இந்திய எல்லையை தாண்டாமல் வான்வெளி தாக்குதல்கள் நடத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், இந்தியா – பாகிஸ்தான் ராணுவங்களின் பலம் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவின் ராணுவ பலம் :
உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்திய ராணுவத்தில் மொத்தம் 14 லட்சத்து 55 ஆயிரத்து 550 வீரர்கள் உள்ளனர். இந்தியாவிடம் 4,800 டாங்கிகள் உள்ளன. கவச வாகனங்கள் 12,000 உள்ளது. மொத்தம் 7,500-க்கும் மேற்பட்ட பீரங்கிகள் உள்ளன. இந்திய விமானப்படையிடம் 600 போர் விமானங்களும், 899 ஹெலிகாப்டர்கள் மற்றும் 831 துணை விமானங்கள் உட்பட 2,229 விமானங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் 1,42,251 பணியாளர்கள் மற்றும் 150 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவிடம் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய விமானம் தாங்கிகள் உள்ளன. இந்தியாவிடம் 160 அணு ஆயுதங்கள் உள்ளன.
பாகிஸ்தான் ராணுவ பலம் :
உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களின் பட்டியலில் பாகிஸ்தான் 12-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தில் 6,54,000 பணியாளர்கள் உள்ளனர். 3,700 டாங்கிகளும், 10,000 கவச வாகனங்களும் உள்ளன. பாகிஸ்தானிடம் 4,300-க்கும் மேற்பட்ட பீரங்கிகள் உள்ளன. பாகிஸ்தான் விமானப்படையில் 430 போர் விமானங்கள், 300-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள், 70-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விமானங்கள் உள்பட 1,400 விமானங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 114 போர்க் கப்பல்கள் இருப்பதாகவும், விமான தாங்கிகள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. நீர்மூழ்கி கப்பல்கள் 9, அணு ஆயுதங்கள் 165 உள்ளன.
ஒருவேளை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் வெடித்தால், மனிதவளம், கடல் படைகள், இராணுவ சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் கையே மேலோங்கி இருக்கும். ரஃபேல் போன்ற மேம்பட்ட போர் விமானங்கள், 2 விமானம் தாங்கிகள், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வலையமைப்பு உள்ளிட்ட நவீனமயமாக்கப்பட்ட ஆயுத பாதுகாப்பை இந்தியா கொண்டுள்ளது. அ
அதே சமயம், பாகிஸ்தானின் பலம் அது எப்போதும் தயார் நிலையில் இருப்பது. அதோடு, Infiltrators எனப்படும் தீவிரவாத அமைப்புகளின் ஊடுருவிகள் காஷ்மீரில் இருப்பது. சீனா உடன் பாகிஸ்தான் நெருங்கிய உறவுகள் இருப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும். அதோடு அவர்களின் அணுசக்தி திறன் இந்தியாவை விட அதிகம். இருப்பினும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் மேற்கு உலக நாடுகள் இந்தியா பக்கம் நிற்கும் என்பது இந்தியாவிற்கு கூடுதல் பலம் ஆகும்.