கோடைக்காலம் வந்துவிட்டது. உங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியமானது. அதே நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவும் சரியானதாக இருக்க வேண்டும். இந்த வெயிலில் இருந்து தப்பிக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்.
அந்த வகையில், நமது உடல் ஆரோக்கியத்தை காக்க, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். எனவே, கோடை காலத்தில் நாம் சாப்பிட வேண்டியவை உணவுகள் குறித்து பிரபல மருத்துவர் அருண்குமார் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த வெயில் காலத்தில் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் சிறந்த உணவு எது என்றால் தண்ணீர் தான்.
இந்த வெயில் காலத்தில் தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். அதேபோல், பொதுவாகவே உணவுகளில் சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காய்கறி, கீரை மற்றும் சமையலில் உப்பு போட்டு சாப்பிடுதல் போன்றவை மூலம் கிடைக்கிறது. ஆனால், செயற்கையான உணவில் எது சிறந்தது தெரியுமா..?
அது ஓ.ஆர்.எஸ் தான். ஓ.ஆர்.எஸ் பாக்கெட் ஒன்றை வெறும் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், நமக்கு கிடைக்க வேண்டிய சோடியம், பொட்டாசியம், குளோரைடு சத்துக்கள் உடனே கிடைத்து விடும். இந்த வெயிலுக்கு இளநீர், மோர், ஓ.ஆர்.எஸ் ஆகியவற்றை தவிர வேறு எதுவுமே பிரயோஜனம் கிடையாது. ஜூஸ் கூட அந்த அளவுக்கு பிரயோஜனம் இல்லை. கூல் ட்ரிங்ஸ் சுத்தமாக பிரயோஜனமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.