சென்னை, அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு பிரிவினரிடையே, மோதல் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் ஆதரவு யாருக்கு என்று பாரதிய ஜனதா கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்றிவிட்டார் என்றாலும், ஓ.பன்னீர்செல்வம் மூலம் தொடந்து குடைச்சல் வந்தால் என்ன செய்வது என்ற கலக்கமும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு இருக்கிறது.
மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டல் சிக்கலாகும் என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி அறியாமல் இல்லை..
இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நெருக்கமான ஒப்பந்ததார்கள் வீடுகளில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனைகள், மேலும் குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு, எதிரான வழக்குகளை விசாரிக்க சிபிஐ கோரிய அனுமதி போன்றவைகள் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் தலைவலியை உண்டாக்கியுள்ளது. எனவே, டெல்லி சென்று பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்து கட்சி விவகாரங்கள் தொடர்பாக பேச எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டிருந்தார்.
ஆனால் ஐந்து நாட்கள் பயண திட்டத்தை வெறும் இரண்டு நாட்களில் முடித்துக்கொண்டு திரும்பி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை, அதிமுகவில் பிளவு என்பதை எப்போதுமே ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சி ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே, அதிமுகவின் ஓட்டு வங்கியை பெற முடியும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் எண்ணமாக உள்ளது. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் பதினைந்து தாமரைகள் மலர வேண்டும் என்று டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.