fbpx

கங்காரு மதர் கேர் என்றால் என்ன?? எப்படிக் கொடுப்பது?

பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. குறைமாத பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றி வரும் கங்காரு மதர் கேர் (Kangaroo Mother Care) யாருக்கெல்லாம் கொடுக்கலாம், எப்படிக் கொடுப்பது மற்றும் எப்போது நிறுத்துவது என்பது குறித்து விரிவாகக் காண்போம்.

கங்காரு மதர் கேரில், பச்சிளங்குழந்தையின் உடல், தாயின் உடலோடு உடல் படும் வண்ணம் (Skin-to-skin contact), தாயின் உடைக்குக் கீழ், மார்பகங்களுக்கு இடையில் பச்சிளங்குழந்தையை செங்குத்தான நிலையில் கிடத்த வேண்டும். குழந்தையின் தலை, இடது அல்லது வலது புறமாக, கழுத்து சற்றே நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்.
இதனால், குறைமாத பச்சிளங்குழந்தையில் ஏற்படும் பாதிப்பான குறுகிய நேர சுவாசம் நின்றுவிடுதல் வெகுவாகக் குறைகிறது.

தாய் தன் கைகளைக் கொண்டு, குழந்தையின் கீழ்ப்புறத்தைத் தாங்க வேண்டும். இந்த நிலையில், குழந்தையின் இரையக பின்னோட்டம் தடுக்கப்படும். ஒட்டுமொத்தமாக இதை கங்காரு நிலை என்போம். 1.8 கிலோவுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு, வேறு எதுவும் பிரச்னைகள் இல்லையென்றால், பிறந்ததிலிருந்தே KMC கொடுக்கத் தொடங்கிவிடலாம். 1.2 கிலோவுக்கு கீழுள்ள குழந்தைகள், முதல் வாரங்களில், பிரச்னைகள் எதுவுமின்றி, சரியான நிலையை அடைந்ததும், KMC கொடுக்கத் தொடங்கலாம்.


குறைந்தது 1 – 2 மணிநேரம் தொடர் KMC கொடுப்பது முக்கியமாகும். குழந்தைக்கு வியர்க்கத் தொடங்கினாலோ, கங்காரு நிலையில் தொடர்ந்து இருக்க முடியாமல் விடுபட முனைந்தாலோ, அப்போது KMC-ஐ நிறுத்த வேண்டும். கங்காரு நிலையில், 30 டிகிரி சாய்ந்த அல்லது அரை சாய்ந்த நிலையில், தாய் குழந்தையை வைத்துக்கொண்டு தூங்கலாம். KMC-ஐ தாய் மட்டும்தான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. குழந்தையின் தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களும் கொடுக்கலாம். KMC கிடைக்கப்பெற்ற குழந்தைகள் அதிக அளவு தாய்ப்பால் கிடைக்கப் பெற்றுள்ளனர். மருத்துவமனையில் குழந்தைக்கு ஏற்படும் நோய்த்தொற்றைக் குறைத்துள்ளது. குழந்தைகளின் எடை, நீளம் மற்றும் தலை சுற்றளவு நன்றாக கூடியுள்ளது.

Maha

Next Post

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை..!

Thu Aug 10 , 2023
தமிழ்நாட்டில் பொதுவாக ஜூன் முதல் டிசம்பர் வரை மழைக்காலம் எனக் கூறப்டும், ஆநாள் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக கோடைகாலத்தை போல் கடந்த இரண்டு வாரங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. 100 டிகிரியை தாண்டி வெயில் பல இடங்களில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]

You May Like