fbpx

புயல் எப்படி உருவாகிறது.? புயல் கரையை கடந்துவிட்டது என்றால் என்ன.? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

பருவமழை காலங்களில் வானிலை ஆய்வு மையங்களின் மூலம் புயல் எச்சரிக்கை விடுவதை பார்த்திருப்போம். நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான புயல் வீசி பல சேதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. புயலின் போது காற்று பல கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதையும் இதனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதையும் செய்திகளின் மூலம் அறிந்திருக்கிறோம். இந்தப் புயல் எவ்வாறு உருவாகிறது இதற்கான காரணம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

புயல் உருவாவதற்கு பூமியின் சுழற்சியும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கடல் மட்டத்தின் மேற்பரப்பில் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக நீடிக்கும் போது அப்பகுதியில் இருக்கும் காற்று வெப்பமடைந்து நீராவி ஆகி மேல் நோக்கி செல்கிறது. இதனால் அந்த இடத்தில் வெற்றிடம் உருவாகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக உயர் அழுத்த பகுதியிலுள்ள காற்று கீழ்நோக்கி வருகிறது. இதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படுகிறது.

இப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு நிலையிலுள்ள காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரிக்கிறது. இது கடலின் மீது மையம் கொண்டு அதிக வேகத்தில் கரையை நோக்கி நகரும் போது புயலாக உருவாகிறது. இவ்வாறு சுழன்று வீசும் காற்று மேக கூட்டங்களுடன் சேர்ந்து கடற்கரையை நெருங்கும் போது புயலுடன் கூடிய கனமழை உருவாகிறது. இந்தக் காற்றானது நிலப்பரப்பில் பயணிக்கும் போது வலுவிழந்து அதன் வேகம் குறைகிறது.

சில நேரங்களில் காற்றின் திசை மற்றும் பூமியின் சுழற்சியால் ஒரு இடத்தில் மையம் கொண்டிருக்கும் புயல் வேறு திசையை நோக்கி நகர்ந்து செல்லலாம். இதன் காரணமாக அருகில் இருக்கும் நிலப்பரப்பிற்கு எந்தவித சேதமும் ஏற்படாது. இதனை தான் புயல் கரையை கடந்தது என அழைக்கிறார்கள்.

Next Post

இத்துனூன்டு சுண்டைக்காயில் இவ்வளவு நன்மைகளா.? வாரம் ஒரு முறை கண்டிப்பாக சாப்பிடுங்க.!

Sun Dec 3 , 2023
தமிழர்களின் சமையலில் சுண்டைக்காய் என்று சிறப்பான ஒரு இடம் உண்டு. கசப்பு சுவை கொண்ட இந்த சிறிய காய் ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொண்டு இருக்கிறது. இவற்றில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்து இருக்கின்றன. சுண்டைக்காய் இடம் உடலின் பல்வேறு நோய்களுக்கும் தீர்வாக விளங்குவதோடு உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது . சுண்டைக்காயில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின் சி […]

You May Like