அதிக விலை மதிப்பான பிஸ்தா பருப்பு பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கிறது. இதை சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் உடலுக்கு ஏற்படுகிறது. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
பிஸ்தா பருப்பில், இரும்பு சத்து, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இதை தவிர்த்து, விட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது.
இந்த பிஸ்தா பருப்பில் இருக்கின்ற மிகக் குறைவான கலோரிகள், உடல் எடையை வெகுவாக குறைக்கிறது. இந்த பிஸ்தா பருப்பை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கு பிஸ்தா பருப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. இந்த பிஸ்தா பருப்பில் இருக்கின்ற ருட்டீன் போன்ற ஆண்டிஅச்சிடெண்டுகள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பிஸ்தா பருப்பில் இருக்கின்ற ஆக்ஸிடென்ட்கள், நம்முடைய செல்களை சேதமடையாமல், பாதுகாத்து, புற்றுநோயின் அபாயத்தை வெகுவாக குறைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.