Kumbh Mela: கும்ப மேளாவில் நேரில் செல்ல முடியாத சூழலால் வீடியோ காலில் இருக்கும் நிலையில், செல்போனை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார் மனைவியின் வீடியோ வைரலாகி வருகிறது
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைப்பெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பகுதியில் ஆண்டுத்தோறும் கும்ப மேளா நிகழ்வு நடைப்பெறும். இந்த ஆண்டு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைப்பெறும் மகா மேளா நிகழ்வு நடைப்பெற்று வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவில் கலந்துக்கொண்டு புனித நீராடி வருகின்றனர். அந்தவகையில், கும்ப மேளாவிற்கு வருகை தந்தவர்களில் சிலர் வைரலாகி விட்டனர். அந்தவகையில் தற்போது ஒரு பெண் தனது செல்போனை தண்ணீரில் மூழ்கி எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அதன்படி இந்த மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெற்று இன்றுடன் (பிப்.26) நிறைவு பெறுகிறது. மகா கும்பமேளா புனித நீர் ஆன்லைனில் கூட விற்பனை செய்யப்படும் நிலையில் மகா கும்பமேளாவுக்கு நேற்று ஒரு பெண் புனித நீராடினார். அவருடன் கணவரால் வர முடியவில்லை. இதனால் கணவர் வீடியோ கால் செய்த போது அப்படியே செல்போனை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார் மனைவி. அப்பெண் நீரில் செல்போனை நனைத்து எடுக்கும் வீடியோ வைரலாகிறது.
Readmore: CSK-வின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக தமிழக வீரர் நியமனம்!. இனி பிராவோவுக்குப் பதிலாக இவர்தான்!