இறைக்க இறைக்கத்தான் கிணற்றில் நீர் ஊரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். நாம் கற்ற கல்வியை பிறருக்கு சொல்லிக்கொடுத்தால் நம்முடைய அறிவு விருத்தி அடையும். அதுபோல நாம் சில பொருட்களை தானமாக கொடுத்தால் நம்முடைய செல்வம் விருத்தி அடையும். எனவே தான் தானம் செய்பவர்களின் வீட்டில் செல்வம் மேலும் மேலும் பெருகுகிறது. அந்த வகையில், எந்தெந்த பொருட்களை தானமாக தர வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தானமும் பயன்களும்…
அன்ன தானம் – கடன் தொல்லைகள் நீங்கும்
அரிசி தானம் – முன்ஜென்ம பாவங்கள் விலகும்
ஆடைகள் தானம் – சுகபோக வாழ்வு அமையும்
பால் தானம் – துன்பங்கள் விலகும்
நெய் தானம் – பிணிகள் நீங்கும்
தேங்காய் தானம் – எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும்
தீப தானம் – முன்னோர்களின் ஆசிகள் கிட்டும்
தேன் தானம் – புத்திர பாக்கியம் கிட்டும்
பூமி தானம் – பிறவா நிலை உண்டாகும்
பழங்கள் தானம் – மன அமைதி உண்டாகும்
வஸ்திர தானம் – ஆயுள் விருத்தி உண்டாகும்
கம்பளி தானம் – வெண்குஸ்ட நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம்
கோ தானம் – பித்ரு கடன் நீங்கும்
கோதுமை தானம் – ரிஷிக்கடன் அகலும்
காய்கறிகள் தானம் – குழந்தை ஆரோக்கியம் மேம்படும்
பூ தானம் – விரும்பிய இல்வாழ்க்கை அமையும்
தயிர் தானம் – இந்திரிய விருத்தி உண்டாகும்
நெல்லிக்கனி தானம் – அறிவு மேம்படும்
தங்கம் தானம் – தோஷம் நிவர்த்தியாகும்
வெள்ளி தானம் – கவலைகள் நீங்கும்
பொன் மாங்கல்ய தானம் – திருமண தடைகள் நீங்கும்
மஞ்சள் தானம் – சுபிட்சம் உண்டாகும்
எண்ணெய் தானம் – ஆரோக்கியம் உண்டாகும்
காலணி தானம் – பெரியோர்களை அவமதித்த பாவம் போக்கும்
மாங்கல்ய சரடு தானம் – தீர்க்க மாங்கல்ய பலன் உண்டாகும்
குடை தானம் – எண்ணிய எதிர்காலம் உண்டாகும்
பாய் தானம் – அமைதியான மரணம் உண்டாகும்
தண்ணீர் தானம் – மன மகிழ்ச்சி உண்டாகும்
சந்தன தானம் – கீர்த்தி உண்டாகும்
புத்தகம் தானம் – கல்வி ஞானம் உண்டாகும்
எள் தானம் – சாந்தி உண்டாகும்
வெல்ல தானம் – வம்ச விருத்தி உண்டாகும்