fbpx

எனது பிறந்த நாளில் வேறென்ன வேண்டும்? – அட்லி வெளியிட்ட புகைப்படம்

இயக்குனர் அட்லீ பிறந்த நாளுக்கு விஜய் மற்றும் ஷாரூக்கான்  நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்தை அட்லீ டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் ஷாரூக்கான், விஜய்யை பார்த்த உற்சாகத்தில் 3 பேருமே கருப்பு நிறத்தில் உடையில் எடுத்துக் கொண்ட போட்டோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகின்றது

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அட்லி இருந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் விஜய்நடிப்பில் அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை கொடுத்தார்.

தமிழில் கலக்கிக்கொண்டிருந்த அட்லி அப்படியே பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கிவிடுவோம் என்று நடிகர் ஷாருக்கை வைத்து ’ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

கனாகானும் காலங்கள் ப்ரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு அட்லி திருமணம் செய்துக்கொண்டார். தற்போது ஜவான் படத்தில் அட்லியின் மனைவி  ப்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அட்லீ தனது 36வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் விஜய் மற்றும் ஷாரூக்கான் ஆகியோர் நேரில் பங்கேற்று அட்லீயை வாழ்த்தியுள்ளனர் . ’’ என் பிறந்த நாளுக்கு இதைவிட வேறு என்ன கேட்க ’’ என பிறந்த நாள்களிலேயே இது மிகச்சிறந்த பிறந்த நாள்… எனது தூண்களுடன் .. எஸ்.ஆர்கே மற்றும் என்னோட அண்ணே என்னோட தளபதி என பதிவிட்டுள்ளார்.

அட்லீ தற்போது ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு பின்னர் விஜய் படத்தை அட்லீ இயக்குவார் என்றும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.

Next Post

நாளை தேசிய சினிமா தினம் : ச்சே ! இப்பிடி ஏமாத்திட்டாங்களே ?

Thu Sep 22 , 2022
சர்வதேச சினிமா தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் அறிவித்த அந்த அறிவிப்பு செல்லாது என தெரிவித்து ஏமாற்ற்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 23 திரையரங்கு டிக்கெட்டின் விலை ரூ.75 என மல்டிபிளக்ஸ் அசோசியேசன் கடந்த இரு வாரம் முன்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மாநில அரசாங்கத்தின் விதிமுறைகளால் தற்போது இந்த சினிமா தினம் தமிழகத்திற்கு செல்லாது என மல்டிபிளக்ஸ் அசோசியேசன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த […]

You May Like