fbpx

தும்மலை கட்டுப்படுத்தினால் என்னென்ன பிரச்சனைகள் வரும்..? இதய துடிப்பு நிற்பது ஏன்..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

நமக்கு தும்மல் வரும் ஒரு நொடி நம் இதயம் நிற்கும். உடலில் பல்வேறு தன்னிச்சையான செயல்கள் நமது கட்டுப்பாடு இல்லாமல் நடைபெறும். பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற தொற்றுக்கிருமிகள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதற்கான வழிகளில் தும்மல் முக்கியமானது. மூக்கு, நுரையீரல், கண் மற்றும் காதுகளில் இருக்கும் கிருமிகள் ஒவ்வாமையை உண்டாக்கும்போது ஏற்படும் எரிச்சல் உணர்வே தும்மலாக வெளிப்படுகிறது.

தும்மும்போது மூக்கு மற்றும் நுரையீரலில் இருந்து 250 கி.மீ வேகத்தில் காற்று வெளியேற்றப்படுகிறது. அதேநேரம் பல்லாயிரக்கணக்கான உமிழ்நீர் மற்றும் சளி துகள்களும் அதன் மூலம் வெளியேறுகின்றன. தும்மலை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு கட்டுப்படுத்தும்போது, சைனஸ் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, கடுமையான இருமல் ஏற்படும். மார்பு தசைகள், நுரையீரலுக்குக் கீழ் இருக்கும் தசைகள், வயிற்றுத் தசைகள், குரல் தண்டு தசைகள், தொண்டையின் பின்புறத்தில் உள்ள தசைகள், கண் இமைகளில் உள்ள தசைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் தும்மல் உருவாகுகிறது.

தும்மல் வரும்போது கண்கள் தானாக மூடும். இது நம்மால் கட்டுப்படுத்த முடியாத அனிச்சை செயல். இதன் மூலம், கண்களுக்கு பின்புறம் ஏற்படும் அழுத்தமும், அசவுகரியமும் தடுக்கப்படும். மேலும் தும்மலின்போது வெளிப்படும் கிருமிகள், வைரஸ்கள் கண்களுக்குள் நுழையாமல் இருக்க இது உதவும். ஒவ்வொரு முறை தும்மும்போதும் ஒரு வினாடி இதயத் துடிப்பு நின்று, பின் அதிகமாகத் துடிக்கும். தும்மலை அடக்கும்போது முதுகு வலி, சுளுக்கு, சில சமயங்களில் எலும்பு முறிவுகூட உண்டாகலாம்.

தூசு நிறைந்த இடத்தில் இருக்கும்போது நமக்கு உடனடியாக தும்மல் வரும். இதற்குக் காரணம், தூசுக்கள் மூக்கு வழியாக நுரையீரலுக்குச் செல்லும்போது, அங்குள்ள தும்மல் சுரப்பி நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்காக உடனடியாக சுரந்து அந்த தூசுக்களை தும்மல் வழியாக வழியாக வெளியேற்றும். தொடர்ந்து தும்மும்போது உடலில் உள்ள உணர்ச்சி நிறைந்த தசைகளில் இறுக்கம் ஏற்படும். அவ்வாறு முதுகு, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படும் தசை இறுக்கத்தால் சிறுநீர்ப் பையில் அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீர் வரும் உணர்வு உண்டாகும். தும்மல் வரும்போது அதை நாம் அடக்கும் நேரம் நேரம் மற்றும் நுரையீரலின் அளவைப் பொறுத்தே தும்மலுடன் சேர்த்து பெரும் சத்தமும் ஏற்படுகிறது.

Read More : ”நீங்கள் சமைக்கும்போது செய்யும் தவறுகள் கூட நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம்”..!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

English Summary

What problems will come if you control sneezing..? Why does the heartbeat stop? Definitely find out..!!…

Chella

Next Post

2026 தேர்தலை நடத்த போகும் முதல் பெண் அதிகாரி...! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

Sat Nov 9 , 2024
The Chief Election Commission has announced that Archana Patnaik has been appointed as the new Election Officer

You May Like