fbpx

’ஜேஎன்.1 கொரோனா வைரஸின் பாதிப்புகள் எப்படி இருக்கும்’..? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

உலகளவில் பரவி வரும் ஜேஎன்.1 கொரோனா வைரஸால் பாதிப்புகள் அதிகமாக இருக்காது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டது. ஓராண்டாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கேரளாவில் ஜேஎன்.1 என்ற புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஜேஎன்.1 வகை கொரோனா வைரஸ் என்பது உருமாறிய பிரோலா (BA.2.86) வகையை சேர்ந்தது ஆகும். ஆனால், இந்த புதிய வகை கொரோனா தனித்துவமாகவும் வேறுபாட்டுடனும் செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வகை கொரோனா வைரஸ் மூலம் கூடுதல் ஆபத்துகள் ஏற்படாது என்றும், பனிக்காலம் என்பதால் சுவாசப் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் இருக்கும் தடுப்பூசிகள் JN.1 வைரஸால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் அல்லது இறப்புகளை தடுக்க போதுமானதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கும், கோவாவை சேர்ந்த 15 பேருக்கும் JN.1 வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.21) விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

Wed Dec 20 , 2023
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 21ஆம் தேதி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வெள்ள நீர் சூழ்ந்த இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசுப் பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருவதால், நாளைய தினம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் […]

You May Like