fbpx

அதிமுகவில் அடுத்தது என்ன நடக்கும்..? இபிஎஸ் என்ன செய்யப் போகிறார்..?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. இந்த நிலையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த ஓபிஎஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு செல்லாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனறும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. மேலும் ஜூன் 23-க்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தாலும் அடுத்த கட்டமாக சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.. மறுபுறம் ஓபிஎஸ் தரப்பு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. எனினும் தற்காலிக வெற்றி தான் என்று இபிஎஸ் தரப்பு தெரிவிக்கின்றது..

இந்நிலையில் அதிமுகவில் அடுத்தது என்ன நடக்கும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய படி, இபிஎஸ் தரப்பில் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அதில் என்ன தீர்ப்பு வந்தாலும் இருவரில் ஒருவர் உச்ச நீதிமன்றம் செல்லக்கூடும்.. இதனால் இந்த வழக்கு பல நாட்கள் நடக்கும். இப்படிப்பட்ட காலத்தில் தேர்தல்கள் வரும் பட்சத்தில் எடப்பாடி – ஓ பன்னீர்செல்வம் இருவரும் இணைந்துதான் எதிலும் கையெழுத்து போட வேண்டும். இவர்கள் இருவரும் கையெழுத்து போட்டால்தான் சின்னம் கூட வேட்பாளர்களுக்கு கிடைக்கும். எனவே இருவரும் இணைந்து செயல்பட வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது..

இந்த தீர்ப்பு காரணமாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று விதி மாற்றம் செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டியது இல்லை. பொருளாளர் பதவி மாற்றத்திற்கும் இதுவே பொருந்தும். இதே போல் சட்டமன்றத்திற்கும் இதுவே பொருந்தும்..

இதனால் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணை தலைவராக நீடிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இடைப்பட்ட காலத்தில் எந்த நியமனமும் செல்லாது என்று கூறப்படுகிறது.. அதன்படி, எடப்பாடி பழனிசாமி மூலம் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஆர்பி உதயகுமாரின் நியமனமும் செல்ல்லாது. இதில் சபாநாயகர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றாலும் தீர்ப்பு அடிப்படையிலேயே அவர் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்ப்பு காரணமாக அதிமுகவில் இபிஎஸ் தனியாக முடிவு எடுக்க முடியாது. இதன் காரணமாக அதிமுகவில் அணிகள் மாற வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் சிலர் எடப்பாடி பக்கத்தில் இருந்து ஓபிஎஸ் பக்கம் செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.. பார்ப்போது அதிமுகவில் அடுத்தது என்ன நடக்கிறது என்று..

Maha

Next Post

தாயின் கண் முன்னே நடந்த பகீர் சம்பவம்; தனியார் பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி.. குழந்தை பலி..!

Wed Aug 17 , 2022
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ள லத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் காசி. இவருக்கு வேதவர்ஷினி மற்றும் பவானிஸ்ரீ(1) என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மூத்தமகள் வேதவர்ஷினி அங்கிருக்கும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். தாய் சுதா, மகள் வேதவர்ஷினியை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டுள்ளார். அப்போது குழந்தை பவானிஸ்ரீயும் பின்னால் வந்ததை சுதா கவனிக்கவில்லை. இந்நிலையில் தனியார் பள்ளி பஸ்சின் பின் சக்கரம் குழந்தை பவானி ஸ்ரீ […]

You May Like