EPS: இன்றுக்குள் கூட்டணி குறித்து நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமித் ஷா இறுதி கெடு விதித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலிமைப்படுத்த பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த வகையில், தமிழ்நாட்டின் தனது பழைய தோழனான அதிமுகவை மீண்டும் கூட்டணிக்கு கொண்டுவர பாஜக பல்வேறு வகைகளிலும் முயற்சித்து வருகிறது. அந்தவகையில் கடந்த பிப்.27ம் தேதி நடைபெற்ற அண்ணாமலை யாத்திரை நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் நல்லாட்சி தந்தார்கள் என்று அதிமுகவின் முக்கிய தலைவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.
மேலும், ரகசியமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணி அமைப்பது குறித்து பாஜக தேசிய தலைமையில் இருந்து அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாகவும், மீண்டும் கூட்டணிக்கு வந்தால் தான் திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க முடியும் என்று கூறிவருவதாகவும் தெரிகிறது. இருப்பினும், இதற்கு பிடிகொடுக்காமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக அமித் ஷா தரப்பில் இருந்து ஒரு முக்கியமான செய்தி நேரடியாகவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இன்றுக்குள் (மார்ச் 5) கூட்டணி பற்றிய நல்ல முடிவை சொல்லவேண்டும் என்றும் இல்லையென்றால் அடுத்து ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று அமித் ஷா செய்தி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: பேரதிர்ச்சி..!! தேர்வெழுத வந்த மாணவிகள் மீது Acid வீசிய இளைஞர்..!! ஒருவர் கவலைக்கிடம்..?