உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் விருந்தாவனத்தின் பிரசித்தி பெற்ற சாமியார் பிரேமானந்த் மகாராஜிடம் ஆசி பெற வருகின்றனர். சமூக ஊடகங்களில் அவர் பிரபலமான சாமியாராக இருந்து வருகிறது. தனது சத்சங்கங்கள் மூலம் உலக மற்றும் ஆன்மீக விஷயங்கள் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் அவ்வப்போது பக்தர்களுடன் அவ்வப்போது கேள்வி பதில் அமர்வு மூலம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பக்தர் ஒருவர் பிரேமானந்திடம் கலியுகத்தைப் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பிரேமானந்த் மகாராஜ் அளித்த பதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
கலியுகம் எப்படி இருக்கும்?
“கலியுகமானது எப்படி இருக்கும்? இந்த காலக்கட்டத்தில் எப்படிப்பட்ட மக்கள் வாழ்வார்கள்?” என்று பக்தர் கேட்டார். அதற்கு பிரேமானந்த் மகாராஜ் கூறிய பதில் அனைவரையும் திகைக்க வைத்தது.
அதற்கு பதிலளித்த பிரேமானந்த் “கலியுகத்தின் போது செல்வம் அதிகமாக இருக்கும். பணக்காரர்கள் மட்டுமே, சிறந்தவர்கள், உன்னதமானவர்கள் மற்றும் நல்லவர்களாக கருதப்படுவார்கள். அதிகாரமும் உடைமைகளும் ஒருவரின் அந்தஸ்தைத் தீர்மானிக்கும் ஒரே காரணிகளாக இருக்கும், துரதிர்ஷ்டவசமாக, இது ஏற்கனவே நம் கண்களுக்கு முன்பாக வெளிப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
ஒழுக்கக்கேட்டால் எதிர்காலம் மாறும்?
“கடந்த காலத்தில், திருமணத்திற்கு முன்பு ஜாதகம் பார்க்கப்பட்டது, குணங்கள் பார்க்கப்பட்டன.. இருப்பினும், கலியுகத்தில் இதுபோன்ற நடைமுறைகள் வழக்கொழிந்து போகும். குடும்பத்தின் பாரம்பரியம் நல்ல மதிப்புகள் எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்காது. திருமணங்கள் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான மேலோட்டமான ஈர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். பாரம்பரியம் பழக்கங்கள், புனிதமான விஷயங்கள் என எல்லாமே மாறிவிடும்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “நேர்மையின்மை மற்றும் வஞ்சகம் நல்லொழுக்கங்களாக மாறும். ஒருவர் எவ்வளவு பொய் சொல்லி சூழ்ச்சி செய்கிறாரோ, அவ்வளவு திறமையானவர்களாகக் கருதப்படுவார்கள். மற்றவர்களை ஏமாற்றுபவர்கள் தங்கள் சாதுர்யத்திற்காகப் பாராட்டப்படுவார்கள். மக்களின் வாழ்க்கையிலிருந்து உண்மையும் நேர்மையும் மறைந்துவிடும்.” என்று தெரிவித்தார்.
மேலும் “தனிநபர்களின் நல்லொழுக்கம், கட்டுப்பாடு அல்லது நல்ல குணங்கள் என எல்லாமே மாறிவிடும். ஒருவர் எவ்வளவு வஞ்சகமாகவும் தந்திரமாகவும் இருக்கிறாரோ, அவர் அந்தளவுக்கு திறமையானவராக கருதப்படுவார். ஒழுக்கக்கேட்டின் ஆழம் கலியுகத்தில் தனிநபர்களின் நிலையை தீர்மானிக்கும்,” என்றும் அவர் கூறினார்.
Read More : இந்த நாட்டில் பெண்கள் பேண்ட் சட்டை அணிய தடை இருந்தது.. இதன் பின்னணி வரலாறு இதோ..!!