fbpx

“அமித்ஷா பற்றி உதயநிதி பேசியதில் என்ன தவறு..” முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்..

சட்டப்பேரவையில் அமித்ஷா பெயரை குறிப்பிட்டு உதயநிதி பேசியதில் எந்த தவறும் இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

தமிழக சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விளையாட்டு துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது.. அப்போது விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசிய போது, அனைத்து உறுப்பினர்களுக்கும் ஐபிஎல் பாஸ் வழங்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி கேட்டிருந்தார்.. அதற்கு பதிலளித்த உதயநிதி “ ஐபிஎல் போட்டியை பிசிசிஐ என்ற அமைப்பு நடத்துகிறது.. உங்கள் நெருங்கிய நண்பர் அமித்ஷா இருக்காரே.. அவருடைய பையன் ஜெய்ஷா தான் அதற்கு ஹெட்.. நாங்க சொன்னா அவரு கேட்கமாட்டாரு.. ஆனால் நீங்க சொன்னா கேட்பாரு.. அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 5 டிக்கெட் வாங்கி கொடுங்க..” என்று தெரிவித்தார்..

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசினார்.. அப்போது, அமித்ஷா குறித்து உதயநிதி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.. அதற்கு பதிலளித்த ஸ்டாலின் “ சட்டப்பேரவையில் அமித்ஷா பெயரை குறிப்பிட்டு உதயநிதி பேசியதில் எந்த தவறும் இல்லை.. திரு. அமித்ஷா என்று உதயநிதி குறிப்பிட்டார்.. அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.. அமித்ஷா பெயரை குறிப்பிட்டது என்ன தகாத வார்த்தையா..? தவறு இருந்திருந்தால், அவை குறிப்பில் இருந்து நானே சொல்லி இருப்பேன்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

கருப்பு மாஸ்க் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த அதிமுகவின் உறுப்பினர்கள்…..! எதற்காக தெரியுமா…..?

Thu Apr 13 , 2023
தமிழக சட்டப்பேரவையில் நேற்று தேசிய அதிமுகவின் கொறடா எஸ்பி வேலுமணி முதலமைச்சர் பேசும் சமயத்தில் நேரலை ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது மட்டும் நேரலை துண்டிக்கப்படுகிறது. இதை யாரோ வேண்டுமென்றே செய்கிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். நேரலையில் ஒளிபரப்பாததை கண்டித்து நேற்று அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் பேசுவதை நேரலை […]

You May Like