உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. ஆனால் அதே நேரத்தில், ஹேக்கர்களின் எளிய இலக்காகவும் வாட்ஸ் அப் உள்ளது. ஹேக்கர்கள் உங்கள் WhatsApp கணக்கை ஹேக் செய்ய பல வழிகள் உள்ளன. உங்கள் வாட்ஸ்அப்-ஐ வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை தெரிந்துகொள்வது முக்கியம். உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க சில எளிய குறிப்புகள் இதோ..

உங்கள் வாட்ஸ்அப் கணக்கின் செயல்பாட்டைக் கவனிக்கவும்: உங்கள் வாட்ஸ்அப்-ல் உள்ள மெசேஜ்களின் பட்டியலை பார்க்கவும். நீங்கள் அனுப்பாத செய்திகள் அல்லது உரையாடல்கள் உங்கள் சாதனத்தில் அனுப்பப்பட்டதாகவோ அல்லது பெறப்பட்டதாகவோ இருந்தால், கவனமாக இருப்பது நல்லது.. ஹேக்கர்கள் உங்கள் கணக்கை பயன்படுத்தக்கூடும்..
தொடர்பு விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்: ஹேக்கர்கள் சில நேரங்களில் தொடர்புத் தகவலை மாற்றலாம். இதை அடையாளம் காண, உங்கள் வாட்ஸ்அப்பில் settings-க்கு சென்று உங்கள் தொடர்புத் தகவல், படம் மற்றும் நிலை விவரங்களை மதிப்பாய்வு செய்யவும். பெயர் மற்றும் தொலைபேசி எண் போன்ற தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்யவும். அதே போல் நீங்கள் எதுவும் செய்யாமலேயே, வாட்ஸ் அப் கணக்கு அணுகல் அல்லது கணக்கு மாற்றம் பற்றிய செய்திகளை பார்த்தால் கவனமாக இருக்கவும். அது ஹேக்கர்களின் வேலையாக இருக்கலாம்..
நீங்கள் சேர்க்காத புதிய தொடர்புகள் ஏதேனும் இருந்தால் உங்கள் WhatsApp தொடர்புகள் பட்டியலைத் தேடவும். அதில் நீங்கள் சேர்க்காத புதிய தொடர்புகள் இருந்தால், உங்கள் வாட்ஸ் அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று அர்த்தம்..
உங்கள் WhatsApp கணக்குடன் இணைக்கப்பட்ட சாதனங்களை மதிப்பாய்வு செய்யவும்: உங்கள் வாட்ஸ் அப் பட்டியலில் தெரியாத சாதனங்கள் இருக்கிறதா என்று அடையாளம் காணவும். அதில் புதிய சாதனம் ஏதேனும் உங்கள் வாட்ஸ் அப் உடன் இணைக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து உடனடியாக வெளியேறவும். மேலும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இந்த எச்சரிக்கை அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உங்கள் இரண்டு-படி சரிபார்ப்பை மீண்டும் அங்கீகரிக்க வேண்டும்.