ஜூலை மாதத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.
உலகளவில் பிரபலமான செய்தியிடல் தளமாக வாட்ஸ் அப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது.. இந்நிலையில் இந்தியாவில் ஜூலை மாதத்தில் மட்டும் 23 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையுடன் ஒப்பிடுகையில் இது அதிகபட்சமாகும். வாட்ஸ்அப்பில் ஜூன் மாதத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது 23 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்தது தெரியவந்துள்ளது. தவறான தகவல்களைத் தடுப்பது, இணைய பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் தேர்தல் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது” ஆகிய காரணங்களுக்காக கணக்கு தடை செய்யப்படுகிறது..
இந்தியாவின் சட்டங்கள் அல்லது வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை மீறியதற்காக அந்நிறுவனத்தின் தடுப்பு நடவடிக்கை மூலம் 2.3 மில்லியன் கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து பேசிய போது “இந்தப் பயனர்-பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்கள் ஆகியற்றின் அடிப்படையில் அப்பின் சொந்த தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன. சமீபத்திய மாதாந்திர அறிக்கையில் கைப்பற்றப்பட்டபடி, வாட்ஸ்அப் ஜூலை மாதத்தில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது,” என்று தெரிவித்தார்..