வாட்ஸ் அப் செயலியில் அனுப்பிய செய்திகளை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கோடிக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்துவதுண்டு. வாட்ஸ்அப் செயலியில் நாள்தோறும் புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அண்மையில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் வெளியிட்டது. அதாவது வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு நாம் அனுப்பும் மெசேஜ்களை எடிட் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தது.
இதன் மூலம் மெசேஜ்களை திருத்த 15 நிமிடங்கள் வரை அவகாசம் அளிக்கிறது. இந்த அம்சத்தை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வாட்ஸ் அப் எடிட் மெசேஜ் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மெசேஜ் எடிட்டிங் அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
எப்படி மெசேஜை எடிட் செய்வது: நீங்கள் மெசேஜ் அனுப்பிய பின் அது தவறாக இருக்கிறது என்று நினைத்தால், அதை கொஞ்சம் நேரம் கையை வைத்து அழுத்துங்கள். அதாவது லாங்பிரஸ் செய்தால், திருத்து என்ற ஆப்சன் வரும். அதை தேர்ந்தெடுத்து மெசேஜை திருத்திக் கொள்ளலாம். ஆனால் 15 நிமிடங்கள் வரை தான் அதற்கு அனுமதி, அதற்குள் திருத்திக் கொள்ள வேண்டும். தற்போதையநிலையில் தவறான மெசேஜ் அனுப்பினால் அதே உடனே every one delete ஆப்சன் கொடுத்தால் மொத்தமாக போய்விடும்.இதை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இனி திருத்திக்கொள்ளலாம். எனவே வாட்ஸ்அப்பில் அனுப்பும் மெசேஜ்களில் எழுத்துப்பிழைகளை சரி செய்ய மக்களுக்கு இந்த வசதி நிச்சயம் உதவியாக இருக்கும்.அதேநேரம் திருத்தப்பட்ட செய்தி என்பதும் மெசேஜ் அனுப்புபவர்களுக்கு தெரியும்.