தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ வேளாண்மை செழித்து வளரும் திட்டங்களை வகுக்க தனி பட்ஜெட்டை அரசு உருவாக்கி உள்ளது.. அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். மண்ணின் தன்மைக்கேற்ற பயிர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன..” என்று தெரிவித்தார்.. இதை தொடர்ந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
- ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகங்களை சேர்ந்த சிறு விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க ரூ.11 கோடி ஒதுக்கீடு
- 385 வட்டார வளர்ச்சி மையங்களில் விவசாயிகளுக்கான சேவைகள் வழங்க வேளாண் மின்னணு உதவி மையம் அமைக்கப்படும்
- சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க விவசாயிகளுக்கு வட்டார அளவில் வாட்ஸ் அப் குழு தொடங்கப்படும்.
- பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து, பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து, கடலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு.
- பலாவில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக கடலூர் மாவட்டம் பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலா ஆராய்ச்சி.
- மாடு, ஆடு, தேனி வளர்ப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள ரூ.50 கோடி நிதியுதவி மற்றும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்
- 3-4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்; ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி நியமனம்.
- நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் உற்பத்திக்கு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு- வேளாண் பட்ஜெட்.
- 4300 ஹெக்டேரில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது; மதுரை மல்லிகை இயக்கத்துக்கு ரூ7 கோடி ஒதுக்கீடு:வேளாண் பட்ஜெட்
- கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ195 ஊக்கத் தொகை; கூட்டுறவு சர்க்கரை ஆலை கழிவுகளில் இயற்கை உரம் தயாரிக்க ரூ3 கோடி நிதி.
- ரூ. 33 கோடியில் எண்ணெய் வித்துக்களுக்கான சிறப்பு மண்டலம் திட்டம்.
- உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்-2.0 செயல்படுத்தப்படும்.
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் கருவேப்பிலை தொகுப்பு.
- ரூ. 12 கோடியில் பருத்தி உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்கை.
- சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ₹3 கோடி நிதி ஒதுக்கீடு.
- தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க நடவடிக்கை.
- தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு; வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ. 29 கோடி ஒதுக்கீடு.
- தேனி, திண்டுக்கல்,கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 எக்டரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு.
- இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட மிளகாய் மண்டலம் அறிவிப்பு.
- பயறு வகைகளின், பரப்பளவையும், உற்பத்தியையும் ஊக்குவிக்க ரூ.30 கோடி நிதி
- உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினிமயமாக்கி Grains என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்படும்.
- விவசாயிகள் ஆர்கானிக் சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க ஆண்டு கட்டணம் ரூ.10,000 மானிய தொகை அறிவிக்கப்படும்.
- தென்னை வளர்ச்சி மேம்பாடு என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற ரூ.20 கோடி ஒதுக்கீடு