fbpx

வீட்டிலே பிரசவம் பார்க்க வாட்ஸ் ஆப் குழு.. குரூப்பில் மட்டும் 1024 பேராம்..!! ஆடிப்போன போலீஸ்

சென்னையில் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவரிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்கென்றே தனியாக வாட்ஸ்ஆப் குழு இருந்ததும், அதில் சுமார் 1024 உறுப்பினர்கள் இருப்பதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் பொக்லைன் வாகனம் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுகன்யா (32), என்ற மனைவியும், கோபிகா (8), தாரணி (4), ஆகிய இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே சுகன்யா மூன்றாவதாக கர்ப்பம் தரித்துள்ளார். 10 மாதம் ஆன நிலையில் கடந்த 17-ஆம் தேதி அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் தானே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அவர் வைத்திருந்த வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதனை அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் இது குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவரது செல்போனை போலீசார் வாங்கிப் பார்த்த போது, அதில், “வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்” என்ற தலைப்பில் வாட்ஸ்அப் குழு ஒன்று அமைத்து அதில் மனோகரன் குழு உறுப்பினராக இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சி தரும் விதமாக சுமார் 1024 உறுப்பினர்கள் அந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்துள்ளனர். மேலும் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என ஏராளமான தகவல்களை பகிர்ந்ததும், அந்த தகவல்களை பார்த்து மனோகரன் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததும் தெரியவந்துள்ளது. தற்போது மனோகரின் மனைவியும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் ஏற்கனவே வீட்டில் பிரசவம் பார்த்து உயிர் இழப்பு சம்பவங்கள் நடைபெற்றிருக்கும் நிலையில் இது போன்ற விபரீதமான வேலைகளை யாரும் ஈடுபட வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read more ; உடற்பயிற்சிக்குப் பின் சாப்பிட வேண்டிய உணவுகள்!… கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

WhatsApp group to watch childbirth at home.. 1024 people in the group alone..!! Crazy police

Next Post

அப்பாவின் சொத்தில் மகளுக்கு இருக்கும் உரிமை என்ன? சொத்துரிமை பற்றி தெரிஞ்சுக்கோங்க..

Fri Nov 22 , 2024
What is the daughter's right in father's property? Learn about property rights..

You May Like