fbpx

’இந்த பொண்ணோட ரேட் எவ்வளவு’..? ஜோராக நடக்கும் பாலியல் தொழில்..!! வலையில் சிக்கும் சிறுமிகள்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் வாட்ஸ் அப் மூலம் பெண்கள், சிறுமிகளின் புகைப்படத்தை அனுப்பி வைத்து விபச்சார தொழில் நடைபெற்று வருவதாக போலீசுக்கு ரசிகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

விசாரணையில், சின்னசாமி நகர் பகுதியில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடைபெறுவது உறுதியானது. அங்கிருந்த கல்பனா (வயது 44) என்ற பெண்ணை கைது செய்த போலீசார், மேலும் 2 பெண்கள், மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களும் கைதாகினர். வீட்டில் இருந்து 3 சிறுமிகளும் மீட்கப்பட்டனர். இந்நிலையில், இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களின் அனுப்பி இந்த கும்பல் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளது.

இவர்கள் அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் இளைஞர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலருக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படத்தை அனுப்பி வைத்து, அதற்கான பணத்தை ஜி-பே மூலம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது. கைதான கல்பனா விபச்சாரத்திற்கு முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார். அவரிடம் சிறுமிகளிடம் அத்துமீறிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தில் பெரிய புள்ளிகளும் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் எலசவனூர்கோட்டை காவலர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

Read More : அனில் அம்பானிக்கு ஆப்பு வைத்த செபி..!! இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய தடை..!!

English Summary

The police received information that the prostitute was being done by sending a photo of women and girls via WhatsApp in Ulundurpet, Kallakurichi district.

Chella

Next Post

ரசிகர்களின் மனதை வென்ற ஹார்ட் பீட் வெப் தொடர் நிறைவு..!! எதிர்பாராத கிளைமாக்ஸ்..!!

Fri Aug 23 , 2024
The series team has announced that the Heartbeat web series has come to an end and the next season will air in 2025.

You May Like