மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் (Whatsapp)செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், அவ்வப்போது புதிய அப்டேட்டுகளையும் மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளில் இருப்பதுபோல், ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாறும் சுவிட்ச் ஆப்ஷன் அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு கணக்கு மட்டுமே பயன்படுத்த முடிகிறது. இதனால், வெவ்வேறு தொலைபேசி எண்களைக் கொண்ட 2 வாட்ஸ் அப் கணக்குகளைப் பயன்படுத்த, இரண்டு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு தீர்வு காணும் வகையில் தான் வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம் (Whatsapp New Features)அமலுக்கு வர உள்ளது.
அதன்படி, QR குறியீடு பொத்தானுக்கு அருகில் உள்ள அம்புக்குறி ஐகானைத் கிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் புதிய வாட்ஸ் அப் கணக்கைச் சேர்க்கும் திறனைப் பெறுவார்கள். அதே மெனுவில் வேறு கணக்கிற்கு மாறுவதும் எளிதாகிவிடும். பின்பு லாக் அவுட் செய்யும் வரை பயனர் அதே கணக்கில் தான் இருப்பார். இந்த அம்சம் பல வாட்ஸ் அப் கணக்குகளை நிர்வகிக்கும் வசதியை வழங்குவதோடு தனிப்பட்ட அரட்டைகள் மற்றும் பிற செய்திகளை ஒரே சாதனத்தில் ஒருங்கிணைக்க பெரும் உதவியாக இருக்கும்.