தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென வாட்ஸ் ஆப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவிப்புக்கு ஆளானார்கள்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் மக்கள் மத்தியில் வாட்ஸ்அப் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. புகைப்படங்கள் , வீடியோக்கள் அனுப்புவதற்று வாட்ஸ் ஆப் செயலி பெரும் உதவியாக உள்ளது.
அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு சாதனமாக வாட்ஸ் ஆப் விளங்குகின்றது. கடந்த 30 நிமிடங்களுக்கு மேலாக வாட்ஸ் ஆப் செயலி பயன்பாட்டில் இல்லாதது மக்களை அவதிக்குள்ளாக்கியது. முன்னறிவிப்பின்றி முடங்கியதால் குறுந்தகவல்களை அனுப்பவும் முடியாமல் பெறவும் முடியாமல் போனது. இதனால் பயனாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
செயலி பாதிப்பு இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டது. டெலிகிராம், இன்ஸ்டாகிராமில் தகவல்களை பரிமாறி வருகின்றனர். உடனடியாக வாட்ஸ் ஆப் கோளாறு செய்யப்பட்டு சேவையை தொடர வேண்டும் என பயனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் வாட்ஸ் ஆப் சேவை முடங்கியது. , நெட்டிசன்கள் டுவிட்டரில் வாட்ஸ் ஆப் டவுன் என்ற ஹேஷ் டேகை பதிவிட்டுள்ளனர். இதை பலரும் பகிர்ந்து வருவார்கள். வாட்சப் சேவை முடக்கத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது