fbpx

இதை செய்ய தவறினால் ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 அளவிற்கு மின் கட்டணம் கூடுதலாக செலுத்த நேரிடும்…!

காவல் துறை சம்மந்தமான அலுவலகத்தில் மின்சாதனப் பொருட்கள் பயன்பாடு தேவைப்படாதபோது அனைத்து வைக்க வேண்டும்.

இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவலர்கள் மற்றும் காவல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கையில்; நுகர்வோர் அமைப்பு ஆய்வில் சுமார் 70 சதவீதம் பேர் தங்களுடைய வீட்டு உபயோக பொருட்களை முழுமையாக அணைத்து வைக்காமல், மின்சார இணைப்பு தொடர்ச்சியாக வரும் வகையில் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், பயன்படுத்தாத மின்சாரத்திற்கும் சேர்த்து கட்டணம் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.மின்சாதன பொருட்களின் பிரதான சுவிட்சை அணைக்காமல் இருந்தால், தொடர்ந்து மின்சாரம் நுகர்ந்து கொண்டே இருக்கும்.

குறிப்பாக ஏசி, டிவி, சார்ஜர் ஆகிய மின்சாதன பொருட்களின் பிரதான சுவிட்சை அணைக்காமல் விட்டால் ஆண்டுக்கு சுமார் 1000 ரூபாய் அளவிற்கு மின்சார கட்டணம் கூடுதலாக செலுத்த நேரிடுகிறது. சுமார் 174 யூனிட் அளவுக்கு மின்சார இழப்பை இது ஏற்படுத்துகிறது.174 யூனிட் மின்சாரத்தில் ஓராண்டு முழுவதும் எல்இடி பல்பை எரியவிட முடியும். 1.5 டன் ஏசியை 116 மணி நேரம் இயக்க முடியும். எனவே, காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அலுவலர்கள், தங்களின் கீழ் பணிபுரியும் காவலர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி, தங்கள் அலுவலகத்தில் உள்ள மின்சாதன பொருட்கள் பயன்பாடு தேவைப்படாத நேரத்தில் சரிவர அணைத்து வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Also Read: அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு வந்து விபத்தில் சிக்கிய நபர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்…! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…!

Vignesh

Next Post

தீவிரமடைந்த போராட்டம்... குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச..

Wed Jul 13 , 2022
வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் […]

You May Like