குரூப் அட்மின்கள் எந்த செய்தியை வேண்டுமானாலும், நீக்க அனுமதிக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகின் பிரபலமான மேசேஜிங் செயலியான வாட்ஸ் ஆப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்டை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய பீட்டா புதுப்பிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் புதிய அம்சம் இப்போது சில பயனர்களுக்கு கிடைப்பதாக தெரிகிறது..புதிய வாட்ஸ்அப் அம்சம் சில காலமாக செயல்பாட்டில் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
அதன்படி, புதிய வாட்ஸ்அப் அம்சம், குரூப் அட்மின்கள், வாட்ஸ்அப் குழுக்களை சிறப்பாக நிர்வகிக்க அனுமதிக்கும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. புதிய வாட்ஸ்அப் குழு அம்சம் அட்மின் டெலீட் (admin delete) என்று அழைக்கப்படுகிறது… மேலும் இது தற்போது சில பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இப்போது வரை, நிறுவனம் புதிய அம்சத்தைப் பற்றிய எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, மேலும் இது பொது பயனர்களுக்கு எப்போது கிடைக்கும் என்பதும் தெரியவில்லை..
நீங்கள் புதிய WhatApp அம்சத்தைப் பெற்றுள்ளீர்களா என்பதைப் பார்க்க, நீங்கள் குரூப் அட்மினாக உள்ள ஒரு குரூப்பில் ஒரு செய்தியை நீக்க முயற்சிக்க வேண்டும். “delete for everyone” என்ற புதிய விருப்பத்தை நீங்கள் பார்த்தால், இந்த அம்சம் செயலில் உள்ளது என்று அர்த்தம். ஆனால் அந்த ஆப்ஷன் வரவில்லை எனில், உங்களுக்கு அந்த அப்டேட் கிடைக்கவில்லை என்று பொருள்..