Amarnath Yatra: நடப்பாண்டுக்கான ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெறும் எனவும் இதற்கான முன்பதிவுகள் இன்று தொடங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோயில்.
குகைக்குள் 40 மீ உயரத்தில் உள்ள சிவலிங்கம் மூலம் இந்த குகை முக்கியத்துவம் பெறுகிறது. குகையின் மேற்கூரையில் இருந்து பனிக்கட்டி வடிந்ததால் உருவான ஸ்லாக்மைட் என அறிவியல் கூறினாலும், இந்துக்கள் இது லிங்க வடிவில் சிவபெருமான் இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 வரை 62 நாட்களுக்கு நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெறும் என அமர்நாத் ஆலய வாரியம் நேற்று அறிவித்தது. அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள 48 கிமீ நுன்வான்-பஹல்காம் பாதை மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள 14 கிமீ குறுகிய, ஆனால் செங்குத்தான பாதைகள் வழியாக பக்தர்கள் யாத்திரை செல்ல உள்ளனர். இதற்கான முன்பதிவுகள் இன்று தொடங்குகிறது.
Readmore: School: தமிழகத்தில் அதிகரிக்கும் கோடை வெயில் தாக்கம்…! பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு…!