School: தமிழகத்தில் அதிகரிக்கும் கோடை வெயில் தாக்கம்…! பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு…!

ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும். மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக கோடை வெப்பத்தின் தாக்கமும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, அனைத்துவித பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும்.

மதியம் 12 முதல் 3 மணி வரை நேரடி வெயில் படும் திறந்த வெளியை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த நேரங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள், விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றை திறந்த வெளியில் நடத்தக்கூடாது. மாணவர்கள் தண்ணீர் அதிக அளவு பருகுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ORS மற்றும் எலுமிச்சை சாறு, நீர்மோர்,லஸ்ஸி, பழச்சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம்.

அனைத்து பள்ளிகளிலும் ORS பாக்கெட்கள், முதலுதவி பெட்டகத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், வெப்பம் தொடர்புடைய உடல் நோய்கள் ஏற்பட்டால் அதில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான வழிமுறைகள் குறித்து அறிவுறுத்த வேண்டும். இந்த விவரங்களை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அமர்நாத் யாத்திரை எப்போது?… இன்றுமுதல் முன்பதிவு தொடக்கம்!

Mon Apr 15 , 2024
Amarnath Yatra: நடப்பாண்டுக்கான ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெறும் எனவும் இதற்கான முன்பதிவுகள் இன்று தொடங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 […]

You May Like