2023 ஆம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் அடுத்த மாதம் 20-ம் தேதி நிகழ உள்ளது..
சூரியன் – சந்திரன் – பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும்.. இந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.. எனினும் சூரியனுடன் ஒப்பிடும் போது நிலவின் அளவு மிகவும் சிறியது என்பதால், நிலவால் சூரியனை மறைக்க முடியாது.. எனவே சூரியனுக்கும் பூமிக்கும் இடிஅயே நிலவு வரும் போது, நிலவை சூரியன் மறைத்திருப்பதால் பார்ப்பதற்கு நெருப்பு வளையம் போல சூரியன் தோற்றமளிக்கும்..
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு முதல் சூரிய கிரகணத்தின் தேதி மற்றும் நேரத்தை மெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 7:04 முதல் மதியம் 12:29 வரை நிகழ்கிறது. இது கலப்பின சூரிய கிரகணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி மற்றொரு சூரிய கிரகணத்தை பார்க்கலாம்… ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக இருக்கும்..
கலப்பின சூரிய கிரகணம் என்றால் என்ன..? பகுதி கிரகணமும் முழு சூரிய கிரகணமும் இணைந்தால், கலப்பின சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது ஒரு அரிய வகை கிரகணம். ஒரு கலப்பின கிரகணத்தில் சூரியன், சில நொடிகளுக்கு, வளையம் போன்ற வடிவத்தை உருவாக்குகிறது.
எந்தெந்த நாடுகளில் பார்க்கலாம்..? ஆஸ்திரேலியா, கிழக்கு மற்றும் தெற்காசியா, பசிபிக் பெருங்கடல், அண்டார்டிகா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும். இருப்பினும் இந்த கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. இருப்பினும், இந்தியர்கள் மற்ற நாடுகளில் இருந்து நேரடி ஒளிபரப்பு மூலம் பார்க்க முடியும்.
அக்டோபர் 14 ஆம் தேதி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் நிகழும். ஆனால், இதையும் இந்தியாவில் பார்க்க முடியாது. எனினும் மக்கள் நேரடி ஒளிபரப்புகளைப் பார்க்கலாம்.