fbpx

’என் அக்கா குழந்தைக்காக கதறகிட்டு வந்தப்போ நீங்க என்ன கதறவிட்டீங்களே சீமான்’..!! சீறிய விஜயலட்சுமி..!!

மலையாள திரையுலகில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் குறித்து ஹேமா கமிட்டியின் அறிக்கை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, ”அனைத்துத் துறைகளிலும்தான் பாலியல் சீண்டல்கள், குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால், திரைத்துறையில் நடப்பதுதான் ஊடகங்களில் தெரிய வருகிறது” என கூறியிருந்தார்.

சீமானின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜயலட்சுமி கூறியிருப்பதாவது, “சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, பச்சை குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்லியிருக்கிறார். அவங்க கேள்வி கேட்டது பாலியல் குற்றச்சாட்டு பற்றி. அதாவது நீங்க விஜயலட்சுமி என்ற நடிகையுடன் குடும்பம் நடத்தி அந்த பெண்ணின் வாழ்க்கையை 14 வருஷமாக சீரழிச்சு போட்டீங்களே.. அதான் உலகத்துக்கே தெரிஞ்ச விஷயமாச்சே.

2008ல நாங்க உங்க ஆபீஸுக்கு எங்க அக்காவுடைய குழந்தையை தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு கதறிகிட்டு வந்து நிக்கும்போது, அப்ப என்ன மிஸ்டர் சீமான் நீங்க செய்தீங்க? என்னை காப்பாற்றினீங்களா? அதே ஆபீசில் வைத்து என்னை கதற கதற என் வாழ்க்கையை சீரழிச்சீங்களே..! மறந்துட்டீங்களா? 6 முறை நீங்க பிணையில் இருக்கும் போது கூட மதுரையில் நான் தேவைப்பட்டேன். அதை மறந்துட்டீங்களா?

எல்லா கேடு கெட்ட வேலையையும் பண்ணிட்டு ரூ50,000 தர்றேன். திமுககாரங்க முன்னாடி பேசாதேன்னு சொன்னீங்களே? கயல்விழிக்கும் எதுவும் தெரிய வேண்டாம்னு சொன்னீங்களே? அதை மக்கள் மறந்துட்டாங்கன்னு நினைச்சீங்களா? என் கூட சப்போர்ட்டுக்குதான் வீரலட்சுமி வந்தாங்க. அவங்களை என்ன என்ன கொச்சையா பேசினீங்க? காளியம்மாளை பிசிறு.. ம… என பேசியதை மக்கள் மறந்துவிடுவாங்களா? என்று விஜயலட்சுமி சரமாரியாக பேசியுள்ளார்.

Read More : கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை எதிரொலி..!! தமிழ்நாடு அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

English Summary

In response to Seeman’s speech, actress Vijayalakshmi released a video.

Chella

Next Post

பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் போட்டி..!! தங்கம் வென்று அசத்தினார் இந்திய வீரர் நித்தேஷ் குமார்..!!

Mon Sep 2 , 2024
Indian player Nitesh Kumar won the gold medal in Paralympic men's badminton tournament.

You May Like