fbpx

மக்களால் வாழவே முடியாத நிலையில், இனி ஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டணம் உயர்வு..? – ராமதாஸ் கண்டனம்

’நுகர்வோர் விலைக் குறியீட்டை காரணம் காட்டி மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும்’ என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நடப்பாண்டில் 52% வரை மின்கட்டண உயர்வை அறிவித்துள்ள மின்வாரியம், இனி மின்சாரக் கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது அறிவித்துள்ள மின் கட்டண உயர்வில் இருந்து மக்கள் மீண்டு வரவே பல ஆண்டுகள் ஆகும். அவர்கள் மீது ஆண்டுக்கு ஆண்டு மின்சார கட்டண சுமை சுமத்தப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வாழவே முடியாத நிலை உருவாகிவிடும்.

மக்களால் வாழவே முடியாத நிலையில், இனி ஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டணம் உயர்வு..? - ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் 90% மக்களின் வருமானம் ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்வதில்லை. மின்சார உற்பத்திச் செலவும் ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்வதில்லை. அவ்வாறு இருக்கும் போது நுகர்வோர் விலைக் குறியீட்டை காரணம் காட்டி மின்சார கட்டணத்தை ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும். நுகர்வோர் விலைக்குறியீடு என்பது சந்தை நிலவரத்தை மதிப்பிடுவதற்கான குறியீடு ஆகும். அதை மின்சாரக் கட்டணத்திற்கும் பொருத்த மின்வாரியம் லாபநோக்கம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. எனவே, ஆண்டுதோறும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. தமிழக அரசு அறிவிப்பு...

Tue Aug 2 , 2022
ராமேஸ்வரம் கடல் பகுதியில் இன்று பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.. இந்நிலையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ […]

You May Like