அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களில் வாழ்நாள் சான்றிதழை எப்போது புதுப்பிக்க வேண்டும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசு ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் தேதி தளர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை புதிய தகவலை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30, 2022 ஓய்வூதியம் பெறும் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1க்கு பதில் அக்டோபர் 1ல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மிகவும் மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு அதிகப்பட்ட சாளரத்தை அனுமதிக்கும் வகையில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி பெற நவம்பர் மாதம் ஆயுள் சான்று அளிக்க வேண்டும். ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995ன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் ஜீவன் பிரமான் அல்லது வாழ்நாள் சான்றிதழை ஆண்டுக்கு ஒரு முறை வங்கிகள் , தபால் அலுவலகங்கள் போன்ற நிறுவனங்களில் சமர்ப்பிக்கலாம்.
அவர்களின் ஓய்வூதியம் பின்னர் எந்த தடையும் இன்றி வழக்கம்போல கிரெடிட் செய்யப்படும். ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை அளிக்க வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு செல்ல வேண்டும். வயது மூத்தவர்களுக்கு இது மிகவும் சிரமம். எனவே 2014ம் ஆண்டு டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழாக மாற்றப்பட்டது. ஆனால் அதை சமர்ப்பிக்க டிஎல்சி எனப்படும் கடிதத்தை எழுதித்தரவேண்டும்.
அக்டோபர் 1 முதல் எந்த வகை ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்க வேண்டும்-?
ஓய்வூதிய துறை மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை 30,செப்டம்பர் 2022 தேதியில் 80 வயதிற்கு மேல் இருப்பவர்கள் தங்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதை அக்டோபர் 1க்கு பதில் நவம்பர் 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். தகுதிவாய்ந்த ஓய்வூதியதாரர்கள் வங்கிகளில் மற்றும் 12 பொதுத்துறை வங்கிகளில் அல்லது தபால் நிலையங்களில் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். கூடுதலாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இந்த முறையில் கண்டிப்பாக தங்கள் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை https://jeevanpramaan.gov.in/app/ இதில் செல்போன் அல்லது மடிக்கணியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது மூத்த குடிமக்கள் சேவை மையம் , அரசு அலுவலகங்கள் , டிஜிட்டல் வங்கிகள் போன்றவற்றிலும் இந்த சேவையை பெறலாம்.