தவெக கட்சி தலைவர் விஜய்க்கு என்னுடைய ஆதரவு எப்போதுமே இருக்கும் என பிரபல நடிகை ஓபனாக கூறியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற அழகு நிலையம் திறப்பு விழாவில் திரைப்பட நடிகை கயல் ஆனந்தி கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நடிக்கிற படங்களில் பெரும்பாலானவை கிராம கதைகளாக அமைந்துள்ளது. எனவே, நடிப்பதற்காக திருச்சி பகுதிகளுக்கு நான் அடிக்கடி வந்துள்ளேன். மன்னர் வகையறா, சண்டிவீரன் ஆகிய படங்கள் நடிக்கும் போது திருச்சி வந்துள்ளதால் திருச்சி உணவு வகைகள் மிகுந்த பிடிக்கும்.
வானம் திரைப்பட இயக்குனரின் இயக்கத்தில் தற்போது ஆந்திராவில் வெப் சீரிஸ் நடித்து கொண்டுள்ளேன். ஒரு காரணத்திற்காக தான் நான் படங்கள் அதிகமாக நடிப்பதில்லை. நடிக்கும் போது அதில் நல்ல சில கருத்துக்களை தெரிவிக்க வேண்டும், ஒரு பொறுப்புள்ள குடிமகளாக இருக்க விரும்புகிறேன். நல்ல படங்களை மட்டுமே நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.
சமூக வலைத்தளங்களை நான் அதிகமாக பயன்படுத்துவதில்லை. சமூக வலைத்தளங்களில் விஷயங்களை செல்வதற்கு முன்னாள் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு? சந்தோஷமாக உள்ளது. திரையில் இருந்து ஒருவர் வந்து இந்த சமூகத்திற்கு நல்லது செய்வது என்பது மிகுந்த சந்தோஷம். உங்களது ஆதரவுக்கு விஜய்க்கு உள்ளதா என்ற கேள்விக்கு? கட்டாயமாக உண்டு என தெரிவித்தார்.