தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்பது குறித்த அறிவிப்பை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ஆம் மாணவ மாணவிகளுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்துக் கொண்டு இருப்பதால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனையடுத்து இதுகுறித்து சென்னையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? அல்லது திட்டமிட்டபடி திறக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று அறிவிக்க உள்ளார்.