fbpx

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்?. நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!

Sunita Williams: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் ஆகியோர் மார்ச் மாதத்தில் பூமிக்கு திரும்புவார்கள் என்ற தகவலை நாசா வெளியிட்டு உள்ளது.

கடந்த ஆண்டு விண்வெளியில் ஆய்வுப் பணிக்கு நாசா விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் ஆகியோர் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் சென்றனர். 10 நாட்கள் மட்டும் விண்வெளியில் தங்கியிருக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்கள் விண்வெளி மையத்தில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனால், அவர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் பூமிககு திரும்புவார்கள் என நாசா கூறியிருந்தது. இதன் இடையே, அவர்களின் உடல்நிலை குறித்து வதந்திகள் கிளம்பின. ஆனால், அதனை சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர் மறுத்தனர். விண்வெளியிலேயே கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுவும் விவாதப் பொருளானது.

இந்நிலையில், ‘ சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ராக்கெட்டை அனுப்ப உள்ளது’, என நாசா அறிவித்துள்ளது.இதன் மூலம் அவர்கள் மார்ச் மாத மத்தியிலேயே பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 12ம் தேதி இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என தெரியவந்துள்ளது.

Readmore: “ஒழுங்கா படி”!. தாய் கண்டித்ததால் விபரீத முடிவு!. 20வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!

English Summary

When will Sunita Williams return to Earth?. Official information released by NASA!

Kokila

Next Post

’இன்னைக்கு தேர்தல் வெச்சாலும் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது’..!! ’எல்லாம் விஜய் கையில தான் இருக்கு’..!! வெளியான கருத்துக்கணிப்பு

Thu Feb 13 , 2025
An India Today-C Voter poll has suggested that the BJP will not be able to win a single seat in Tamil Nadu.

You May Like