10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்விடைந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு துணைத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் மாணவிகளில் 95.88% பேரும், மாணவர்களில் 91.74% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் 10ஆம் வகுப்பு மாணவர்களின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.80 ஆக உள்ளது. அதேபோல, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வில், 4,46,411 ஆண் மாணவர்கள், 4,40,465 பெண் மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் 272 சிறை கைதிகள் என மொத்தம் 9,13,036 பேர் பங்கேற்றனர். மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
இந்நிலையில் தான், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்விடைந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு துணைத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 4.07.2025 முதல் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்படும்.
துணைத் தேர்வுக்கு மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்க சேவை மையங்களிலும் 22.05.2025 முதல் 06.06.2025 வரை விண்ணப்பிக்கலாம்” என்று அறிவித்துள்ளார்.
Read More : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழ்நாடு அரசு வேலை..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!