இரண்டு மைனர் சிறுமிகளை 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தனியார் காப்பகத்தின் உரிமையாளர் உட்பட 3 கைது செய்யப்பட்டுள்ளனர்
கொல்கத்தா நகரின் புறநகரில் உள்ள ஹரிதேப்பூர் என்ற இடத்தில் உள்ள காப்பகத்தின் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு மைனர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இருவரும் கைதாகியுள்ளனர்.
சம்மந்தப்பட்ட காப்பகத்தில் இருந்த அனைவரும் மற்ற காப்பகத்திற்கு பாத்திரமாக மாற்றப்பட்டனர். இதனையடுத்து, அந்த தனியார் காப்பகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர், அந்த தனியார் காப்பகத்துடன் தொடர்புள்ள அரசு சாரா நிறுவனத்தை (NGO) அணுகி, பாலியல் பலாத்காரம் குறித்து அந்த காப்பகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரிகள் மேற்கு வங்க குழந்தைகள் உரிமை ஆணையத்தைத் தொடர்பு கொண்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை தலைமையகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த காப்பகத்தில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், உரிமையாளர் மற்றும் கூட்டாளிகள் இருவரை கைது செய்தனர்.
இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காப்பகத்தின் உரிமையாளர் அடிக்கடி தனது செல்வாக்குமிக்க தொடர்புகளைப் பற்றி பெருமையாக பேசுவதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மற்றவர்களுடன் நல்ல உறவை கொண்டிருக்கவில்லை என்றும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.