fbpx

அடேய் எங்க இருந்துடா வந்தீங்க..? ரூ.2.15 லட்சத்தை நாசமாக்கிய கரையான்கள்..!! வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள காலாஜி கோராஜி பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் ஏராளமானோர் ரூபாய் நோட்டுகள் மட்டும் ஆவணங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். இதில் 265ஆம் எண் கொண்ட பெட்டகத்தில் சுனிதா மேத்தா என்பவர் ரூ.2.15 லட்சம் பணம் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை வைத்திருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு சமீபத்தில் பணத்தேவை ஏற்பட்டதால் லாக்கரில் உள்ள பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அப்போதுதான் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வங்கிக்கு சென்று ஊழியர்களிடம் கூறிவிட்டு தனது பாதுகாப்பு பெட்டகத்தை திறந்துள் பார்த்துள்ளார். அப்போது, அதில் இருந்த பணம் மற்றும் சொத்து ஆவணங்களை கரையான்கள் அரித்திருந்துள்ளது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர்களிடம் சுனிதா மேத்தா புகார் தெரிவித்துள்ளார். அதன்பின்னரே வங்கி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு முதற்கட்டமாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு பெட்டகத்தை வைத்துள்ள பிறருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் வங்கிக்குவந்து பார்த்தபோது அவர்களில் சிலரின் உடமைகளும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அனைவருக்கும் இதற்கான நஷ்டஈடு வழங்கப்படும் என வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

நடு ரோட்டில் மனைவிக்கு அடி உதை! தடுக்க வந்த காவல்துறையினரையும் தாக்கியதால் பரபரப்பு !

Sun Feb 12 , 2023
திருச்சியில்  பிஎஸ்என்எல் ஊழியர் ஒருவர்  தனது மனைவியை திடீரென நடுரோட்டில் வைத்து சரா மாறியாக தாக்கியதால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது  இது தொடர்பாக காவல்துறையினரத் நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டன் பகுதியைச் சேர்ந்தவர்  பிஎஸ்என்எல் ஒப்பந்தத் ஊழியரான விக்னேஸ்வர். இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்  பணியாற்றி வருவதாக […]

You May Like