fbpx

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த அரிசி கொம்பன் எங்கே விடப்படுகிறது…….? தமிழக அரசு வழங்கிய விளக்கம்…….!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக்கொம்பன் என்ற காட்டு யானையை ஒரு மாதத்திற்கு பிறகு வனத்துறையினர் பிடித்துள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்ன கடல் பகுதியில் மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் என்ற காட்டு யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.

இந்த யானையை தமிழகத்தை ஒட்டி இருக்கக்கூடிய கண்ணகி வனக்கோட்டம் அருகே கேரள வனப்பகுதி பெரியார் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் விட்டுச் சென்றனர் அதன் பிறகு கடந்த ஒரு மாதமாக தமிழக பகுதியான ஹைவேஸ் மேகமலை, லோயர் கேம்ப், கம்பம் மற்றும் சண்முகா நதிஅணை, பூசாரி கவுண்டன்பட்டி, பெருமாள் மலை பகுதிகளில் தொடர்ந்து சுற்றி திரிந்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 3 மணி அளவில் பூசாரி கவுண்டன்பட்டி அருகே உள்ள பெருமாள் மலையில் 5 பேர் கொண்ட கால்நடை மருத்துவர் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பன் நாட்டியாலையை பிடித்துள்ளனர் இத்தகைய நிலையில், அரிசி கொம்பன் காட்டு யானை அடர் வனப்பகுதியில் விடப்படும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அரிசி கொம்பன் யானை களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதியில் விடப்பட உள்ளதாகவும், அரிசி கொம்பன் யானையால் ஏற்பட்ட பாதிப்புகள் சேதம் தொடர்பாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Next Post

ஒடிசா ரயில் விபத்து இதுவரையில் எத்தனை உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது…..? தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு….!

Mon Jun 5 , 2023
ஒடிசா மாநிலத்தின் ஷாலிமாறிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கடந்த 2ஆம் தேதி பயணித்துக் கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசூர் மாவட்டம் பாகா மஹா பஜார் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரும்பு தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதன் பெட்டிகள் சரக்கு ரயில் மீதும் அருகில் இருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பெங்களூரு ஹவுரா விரைவு […]

You May Like