கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படாது.
தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47,407 பேர் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
மொத்தமுள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும், முன்னுரிமைபெற்ற 95.67 லட்சம் குடும்ப அட்டைகளும் உள்ளன. இந்த நிலையில் குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் தங்கள் கைரேகையை ரேஷன் கடைகளில் பதிவு செய்யாவிட்டால், பொருட்கள் குறைக்கப்படும் என்று செய்தி வெளியானது. அது உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படாது; குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட மாட்டாது. ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பை பிப்ரவரி மாத இறுதிக்குள் மேற்கொள்ளாவிடில் பெயர்கள் நீக்கப்படுமென வெளியான தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மின்னணு குடும்ப அட்டையில் விரல் ரேகை சரிபார்ப்புப் பணி 63% முடிந்துள்ளது. இதற்கென தனி முகாம்கள் நடத்தவும் தேவைப்படின் வீட்டிற்கே சென்று புதுப்பித்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.