பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலில் இருந்த எந்த நாட்டின் புல்லட்..? என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதாவது, பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தியா இதற்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று கூறப்பட்ட நிலையில், பாகிஸ்தான் இதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், தான் இன்று காலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில் தான், நடிகர் மன்சூர் அலிகான் காஷ்மீருக்குச் சென்று அங்கு தான் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கிருந்து வந்தாங்க.? எப்படி போனாங்க? இராணுவம் சுற்றி வளைத்து ஏன் புடிக்கல? துப்பாக்கிச் சூட்டில் இறந்த என் மக்களின் உடம்பில் இருந்தது எந்த நாட்டினுடைய புல்லட்? அரசை கேள்வி கேட்க நமக்கு உரிமையில்லையா என்ன? பதவிக்காக அப்பாவி மக்களை ஏன் பலி குடுக்குறீங்க?” என பதிவிட்டுள்ளார்.