fbpx

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று (06.06.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை(ஜூன் 7) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.06.2024 முதல் 11.06.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 05.06.2024 முதல் 09.06.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் / இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று முதல் ஜூன் 9ஆம் தேதி வரை: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வங்கக்கடல் பகுதிகள்: 05.06.2024 மற்றும் 06.06.2024; தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More: மெக்சிகோவில் புதிய அதிபர் பதவியேற்று 24 மணி நேரம் கூட ஆகல.. நடுரோட்டில் சுட்டுக் கொலை!!

Rupa

Next Post

அடிமடியிலேயே கையை வைத்த நிதீஷ்!… நிபந்தனைகளில் பிடிவாதம்!… அரண்டு போன பாஜக!... சந்திரபாபு நாயுடுவின் திட்டம் என்ன?

Thu Jun 6 , 2024
Nitish Kumar: 4 கேபினெட் அமைச்சர்கள், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, முன்கூட்டியே மாநிலத் தேர்தல், மாநிலத்தின் திட்டங்களுக்கான பல லட்சம் கோடி நிதியாதாரம் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து நிதிஷ் குமார் பாஜகவை அலறவிட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மத்தியில் மூன்றாவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. இதை உறுதிசெய்யும் வகையில் […]

You May Like