நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இதை முன்னிட்டு இன்று பனையூரில் தவெகவின் 2 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதையொட்டி, இன்று கட்சி தலைமையகத்தில் கொடி ஏற்றி, கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர் , வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தார் தவெக தலைவர் விஜய்.
இந்த நிகழ்வில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும், தலைமைக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால். தவெகவில் அண்மையில் இணைந்து தேர்தல் பிரிவு மேலாண்மை பிரிவின் பொதுச் செயலாளர் ஆன ஆதவ் அர்ஜுனா இன்றைய நிகழ்வில் பங்கேற்காதத சர்ச்சையானது. அதாவது உத்தரகாண்டில் நடக்கும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணியின் ஒருங்கிணைப்பாளராகப் பங்கேற்றிருப்பதால் த.வெ.க-வின் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவில் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். அதனைதொடர்ந்து 2 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான செய்தியை தமது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் ஆதவ் அர்ஜுனா. “தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது தமிழக வெற்றிக் கழகம். சமத்துவம், சமூக நீதி, சம நீதி என்ற மானுட கோட்பாட்டையும், அதற்கு வழிகாட்டியாக, கொள்கை ஆசான்களாக ஐந்து வரலாற்றுத் தலைவர்களையும் கொண்டுள்ள நமது தமிழக வெற்றிக் கழகம், புதிய சகாப்தத்தை உருவாக்கவுள்ளது.
மக்கள் துணையுடன், தலைவரின் வழிகாட்டுதலுடன், முன்னணி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், தொண்டர்களின் உழைப்புடன் நாம் நம் மக்களுக்கான அந்த மகத்தான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி, நூறாண்டு காலம் களமாடும் இயக்கமாக நமது வெற்றிக் கழகத்தை வீறுநடை போடச் செய்யும் வரலாற்றுப் பணி நம் முன் உள்ளது. அந்த இலக்கை அடைய அனைவரும் களத்தில் இறங்கி அயராது உழைப்போம் என்று இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Read more : B.E முடித்தவரா நீங்கள்? ரூ.90,000 வரை சம்பளம்.. BHEL நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்..!!