சைவ உணவை விட அசைவ உணவை விரும்புபவர்களே அதிகம். அதிலும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலே காலையில் முதல் வேலையாக கடைக்கு சென்று கறி எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவது பலரின் வழக்கம். அப்படி பலர் விரும்பும் உணவாக இருப்பது கோழிக்கறி தான். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ வாசிகள் பலரும் இறைச்சி கடைக்கு படையெடுத்துள்ளனர்.
இதில் சிக்கன் வாங்க வேண்டும் என்று நினைத்த வாடிக்கையாளர்கள் பலரும் சிக்கன் விலையை கேட்டு ஷாக் ஆகியுள்ளனர். கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.87 ஆக இருந்த நிலையில் இன்று விலை உயர்ந்து ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் தோல் நீக்கிய கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ.200க்கும் விற்பனையாகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் சிக்கன் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடையில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் உற்பத்தி குறைந்து தேவை அதிகரிப்பால், பிராய்லர் கோழி விலை உயர்ந்துள்ளதாக சொல்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட இதே விலைதான் விற்கப்படுகிறது. சிக்கன் விலையும் உயர்ந்துள்ளதால், அசைவ பிரியர்கள் உச்சக்கட்ட கவலையில் ஆழ்ந்துள்ளனர்..
Read more: தினமும் பரிசோதனை.. அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை..!!