fbpx

அரசு பள்ளியில் ஆன்மிக பேச்சாளர் சர்ச்சை பேச்சு.. பள்ளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..!!

தமிழக ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தா நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இது முதலமைச்சர் தனது X தளப்பக்கத்தில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் – அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!” என தெரிவித்துள்ளார்.

Read more ; 900 கோல்.. கால்பந்து உலகில் புதிய மைல்கல்..!! வரலாற்று சாதனை படைத்த ரொனால்டோ..

English Summary

While the Governor of Tamil Nadu has criticized the quality of education in government schools in Tamil Nadu, Chief Minister M. K. Stalin has given advice to the schools.

Next Post

SSC‌ தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு...! வெளியான தேர்வு தேதி...

Fri Sep 6 , 2024
Important Notice for SSC Candidates

You May Like