fbpx

White Hair | இளம் வயதிலேயே நரைமுடியா..? இனி கவலையே வேண்டாம்..!! கைவசம் 5 விஷயம் இருக்கு..!!

முன்பெல்லாம் நரைமுடி என்பது வயதானவர்களுக்கு வரும். ஆனால், இப்போதெல்லாம் இளம் வயதினருக்கே இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது. இது பலருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. உங்கள் தலையின் நரைமுடியை மாற்ற இரசாயனம் கலந்த ஹேர் டை பயன்படுத்தி பயன்படுத்தி நீங்கள் சலித்து போயிருக்கலாம். உங்களுக்கு வீட்டிலேயே எளிய முறையில் தயார் செய்யக்கூடிய 5 வகையான டிப்ஸ் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மருதாணி இலை : மருதாணி இலை, கைப்பிடி அளவு நெல்லிக்காய், 2 காபிக் கொட்டை, சிறிதளவு கொட்டைப் பாக்குப் பொடி 3 டீஸ்பூன் அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து இரவு முழுக்க ஒரு பாத்திரத்தில் ஊறவிட்டு காலையில் இந்த விழுதைக் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, இளஞ்சூடான நீரில் கூந்தலை அலசவும். இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைத் தலைமுடியில் பூசி வந்தால் இளநரை மறையும்.

டீ தூள் : இரண்டு ஸ்பூன் டீ தூளை தண்ணீரில் கொதிக்க விட்டு தண்ணீர் அடர்த்தியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும். பின்பு ஆற வைத்து ஆறிய பின் தலையில் இந்த கலவையை தடவி சிறிது நேரம் கழித்து நீரால் தலையை அலசினால் இளநரை மறையும். டீத்தூள் பயன்படுத்தும்போது ஷாம்பூவால் தலையை அலசக்கூடாது.

மருதாணி இலை, நெல்லிக்காய், காஃபி தூள் : மருதாணி இலை 3 ஸ்பூன், நெல்லிக்காய் பவுடர் 1 ஸ்பூன், காபி தூள் சிறிதளவு தயிர் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து வைத்து அந்த பேக்கை தலை முடியில் தடவி காயவிட வேண்டும். நன்றாக காய்ந்தவுடன் மென்மையான ஷாம்பூவால் தலையை அலசினால் இளநரை மறையும்.

சீரகம் : சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தால் இளநரை மறையும்.

மருதாணி இலை, எலுமிச்சை : மருதாணி இலையை நன்கு மை போல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தய பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

Read More : ’இனி கிரைய பத்திரங்களை பொதுமக்களே தயாரிக்கலாம்’..!! பதிவுத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

In the past, gray hair was a common occurrence among the elderly, but nowadays, it is increasingly affecting young people.

Chella

Next Post

உயிருக்கே ஆபத்தாகும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்..!! இதெல்லாம் ரொம்ப டேஞ்சர்..!! ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Sun Apr 6 , 2025
People who eat highly processed foods are more likely to die from heart disease, cancer and respiratory diseases, a study has found.

You May Like