fbpx

2024-ல் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார்..? அமித்ஷா வெளியிட்ட அறிவிப்பு..

2024 மக்களவை தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருப்பார் என அமித் ஷா அறிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாட்னாவில் நடைபெற்ற 2 நாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, “2024ல் பாஜக-ஜேடியு இணைந்து தேர்தலில் போட்டியிடும், நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருப்பார்.” என்று தெரிவித்தார்.. 2024 லோக்சபா தேர்தலுக்கு, பிரதமர் வேட்பாளர்கள் பற்றிய விவாதம் பரபரப்பான பேசு பொருளாக இருந்து வருகிறது.. மேலும், பிரதமர் நரேந்திர மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்தும், புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவது குறித்தும் அடிக்கடி ஊகங்கள் நிலவி வருகின்றன.

இந்த சூழலில் 2024 ஆம் ஆண்டு நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக தலைவருமான அமித் ஷா இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..

தொடர்ந்து பேசிய அமித்ஷா “75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தேசியக் கொடி ஏற்றப்படும். சுதந்திரத்திற்குப் பிறகு, மோடி அரசில் பழங்குடியினர் மற்றும் தலித்துகள் அமைச்சர் பதவிகளில் அதிகளவில் பதவியேற்றுள்ளனர். நாட்டில் தேசபக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று ஷா கூறினார். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, மூன்று நாட்களுக்கு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தேசியக் கொடி ஏற்றப்படும் என்பதை பாஜகவினர் உறுதி செய்ய வேண்டும்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

வேனில் பயணித்தபோது மின்சாரம் தாக்கி 10 பேர் பலி..! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Mon Aug 1 , 2022
மேற்கு வங்கத்தில் வேனில் பயணம் செய்தபோது மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் சிதால்குச்சி பகுதியைச் சேர்ந்த 26 பேர் வேன் ஒன்றில் ஜல்பேஷ் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற வாகனம் மேக்லிகஞ்ச் பகுதிக்குச் சென்றபோது திடீரென மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, வாகனத்தை ஓட்டியவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். […]
வீட்டுக்குள் தொங்கிய நிலையில் கிடந்த சடலம்..! திருட சென்ற வீட்டில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்..!

You May Like