இந்தியாவிலேயே மிகவும் மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது ஆ.ராசா தான் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று கோவை மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக வேலூரில் இருந்து தனி விமான மூலம் கோவை வந்த பிரதமர் மோடி பிரச்சார மேடைக்கு வருகை தந்தார். பாஜக சார்பில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் கோவை வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி தொகுதி வேட்பாளர் எல்.முருகன், திருப்பூர் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சி வேட்பாளர் வசந்தராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்தியாவிலேயே மிகவும் மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது ஆ.ராசாதான். ஜனநாயகம் குறித்த பாடத்தை எங்களுக்கு திமுக எடுக்க தேவையில்லை. வாக்குக்காக மக்களுக்கு திமுக கொடுக்கும் பணமானது கஞ்சா பணம் தான். அடுத்த 7 நாட்களுக்கு பாஜகவினர் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் பிரதமர் மோடி நமக்காக 5 ஆண்டுகள் பணியாற்ற முடியும்” என்றார்.
Read More : ”பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இனி தேர்தலே இருக்காது”..!! புயலை கிளப்பிய நிர்மலா சீதாராமனின் கணவர்..!!