ஹெச்டிஎப்சி வங்கி உடன் நாட்டின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்டிஎப்சி பல மாத முயற்சிக்கு பின்பு ஜூலை 1 ஆம் தேதி இணைக்கப்பட உள்ளது. இந்த இணைப்பின் மூலம் உலகின் பல வங்கிகளை பின்னுக்கு தள்ளி ஹெச்டிஎப்சி வங்கி உலகின் 4வது பெரிய வங்கி அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் வீட்டுக்கடன் சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்டிஎப்சியின் சேர்மன் ஆக இருக்கும் தீபக் பரேக், இந்நிறுவனத்தின் கடைசி நிர்வாகு குழு கூட்டத்திற்கு பின்பு, தான் சேர்மன் ஓய்வு பெற முடிவு செய்ததால் அப்பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
தீபக் பரேக் ஹெச்டிஎப்சி-யில் தனது அனுபவத்தை மறக்க முடியாது எனவும் ஹெச்டிஎப்சி வங்கியின் sales engine ஆக இனி வீட்டுக் கடன் பிரிவு இருக்கும் என அறிவித்தார். மேலும் தீபக் பரேக் தனது ஓய்வு பெறுவது குறித்த அறிக்கையில் பங்கு முதலீட்டாளர்கள், ஊழியர்கள் நிர்வாகம் என அனைவரையும் குறிப்பிட்டு உள்ளார்.
தீபக் பரேக்-கிற்கு தற்போது 78 வயதாகிறது. 1978 ஆம் ஆண்டில் இருந்து தீபக் பரேக் ஹெச்டிஎப்சி நிறுவனத்தில் பணியாற்றியும் வழி நடத்தியும் வருகிறார். தீபக் பரேக் தனது பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார், அதன் பின்னர் மும்பைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் Sydenham கல்லூரியில் B.Com பட்டம் பெற்றார்.
இதை தொடர்ந்து லண்டனில் ICAEW இல் சார்ட்டெட் அக்வுன்டென்ட் பட்டத்தை 1965 பெற்று, தனது ஆர்டிக்கல்ஷிப்-ஐ லண்டனில் அப்போது வின்னி, ஸ்மித் மற்றும் வின்னி என அழைக்கப்பட்ட இப்போதைய எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தில் முடித்தார். மேலும் இவர் ACA தேர்வுகளை முதல் முறையே முடித்த காரணத்தால் எர்ன்ஸ்ட் & யங் இவருக்கு நியூயார்க்-ல் வேலைவாய்ப்பை கொடுத்தது. தீபர் பரேக் தனது ஆரம்பக்கட்டத்தில் எர்ன்ஸ்ட் & யங், கிரைண்ட்லேஸ் வங்கி மற்றும் சேஸ் மன்ஹாட்டன் வங்கி ஆகியவற்றின் தென்னாசியாவின் இணை உறுப்பினராக பணியாற்றினார். அதன் பின்பு 1978 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து ஹெச்டிஎப்சி நிறுவனத்தில் சேர்ந்தார்