fbpx

உப்பை அளவுக்கு அதிகமாக சாப்பிடுறீங்களா.! WHOவின் அதிரடியான எச்சரிக்கை.!?

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சுவையை அதிகரிக்க உப்பை பயன்படுத்துகிறோம். உப்பு சமையலுக்கு தேவையான அத்தியாவசியமான பொருள் தான் என்றாலும் அளவுக்கு அதிகமாக உணவில் பயன்படுத்தும் போது உடலில் பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்ககிறது. உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் நோய்களை குறித்து பார்க்கலாம்?

“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதேபோல உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் நம் உடல் குப்பையாக மாறிவிடும் என்பதும் உண்மையே. உப்பின் தன்மை உடலில் அதிகரித்து ஆண்டுக்கு 1.89 மில்லியன் பேர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

குறிப்பாக இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சனை போன்ற உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் உப்பை சுத்தமாக உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. பொதுவாக நாம் உண்ணும் பொருட்களில் சாதாரணமாகவே உப்புச்சத்து இருந்து வருகிறது. இதுபோக சோடியம் நிறைந்த உப்பை தனியாகவும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் உப்பின் அளவு உடலில் அதிகரித்து பக்கவாதம், இதய பாதிப்பு போன்ற பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுகிறது.

உப்பை எவ்வளவு பயன்படுத்தலாம்: பிறந்தது முதல் 5 வயது ஆகும் வரை குழந்தைகளுக்கு உணவில் உப்பு பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. பெரியவர்களுக்கு ஒரு நாளில் 2கிராம் அளவிற்கு அதாவது 1ஸ்பூன் அளவிற்கு மட்டுமே உப்பை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அளவான உப்பை மட்டுமே எடுத்துக் கொள்வதன் மூலம் நீண்ட நாள் வாழலாம் என்று உலக சுகாதார மையம் WHO எச்சரிக்கை செய்துள்ளது.

Rupa

Next Post

கையில போன் இருந்தா என்ன வேண்டுமானாலும் பண்ணுவிங்களா?… உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Fri Jan 19 , 2024
முதல்வர், அமைச்சர்கள் குறித்து அவதூறு பதிவிடுவதை ஏற்க முடியாது என்று கூறிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, செல்போன் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பதிவிடலாமா? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள தனிசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் விஜில் ஜோன்ஸ். இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் […]

You May Like