fbpx

SBI வங்கி-யின் அடுத்த தலைவர் யார்? நாளை ரிசல்ட்..!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க FSIB அமைப்பு நாளை நேர்முக தேர்வு நடத்த உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். இதற்கிடையில் வங்கி யாரை புதிய தலைவராக நியமிக்க உள்ளது என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது. இந்திய மக்களின் பெரும் பகுதி பணத்தை கையாளும் வங்கி என்பதால் எஸ்பிஐ வங்கியின் தலைவராக நியமிக்கப்படுபவர் திறமைசாலியாக இருக்க வேண்டும்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் இன்டிபென்டென்ட் அமைப்பான நிதி சேவை நிறுவனங்கள் பணியாளர் தேர்வு வாரியம் எஸ்பிஐ வங்கி தலைவர் பதவிக்கான நபர் பல தரப்பில் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் FSIB அமைப்பு மே 21 ஆம் தேதி நேர்முக தேர்வு நடத்த உள்ளது. இதே நாளில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி எஸ்பிஐ வங்கி தலைவர் பதவிக்கு SBI வங்கியின் மூன்று நிர்வாக இயக்குநர்களான சி.எஸ்.ஷெட்டி, அஸ்வினி குமார் திவாரி மற்றும் வினய் எம். தொன்சே ஆகியோர் இந்தப் பதவிக்கான முன்னணிப் போட்டியாளர்களாக இருக்கின்றனர். இதேவேளையில் SBI வங்கியின் நான்காவது நிர்வாக இயக்குநர் அலோக் குமார் சௌத்ரி ஜூன் மாத இறுதியில் ஓய்வுபெற உள்ளார்.

பொது துறை நிதி நிறுவனங்களில் மூத்த நிர்வாகிகளை நியமிக்கும் பொறுப்பு FSIB க்கு உள்ளது. இதனால் நாளை FSIB அமைப்பு மூவரையும் இன்டர்வியூவ் செய்ய உள்ளது. இதில் தேர்வான நபருக்கு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தினேஷ் காரா ஓய்வு பெறும் ஆகஸ்ட் 28 தேதிக்கு அடுத்த நாளே புதிய தலைவர் நியமிக்கப்படுவார்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும் அவர் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தினேஷ் காராவின் பதவிக்காலத்தில், எஸ்.பி.ஐயின் செயல்பாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டது. இதேபோன்ற அல்லது இதை விடவும் சிறப்பான பர்பாமென்ஸ்-ஐ கொடுக்க வேண்டும். தினேஷ் காராவின் பதவிக்காலத்தில் எஸ்பிஐ வங்கி பங்கு விலை ரூ.250 லிருந்து ரூ.820 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கியின் லோன் வாங்குவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..? நீங்களும் இந்த தவறை பண்ணாதீங்க..!!

Next Post

போதைப்பொருளுக்கு அடிமையான விஜய், த்ரிஷா, தனுஷ்..!! உடனே டெஸ்ட் எடுங்க..!! புதிய புயலை கிளப்பிய வீரலட்சுமி..!!

Mon May 20 , 2024
பாடகி சுசித்ரா குற்றம்சாட்டிய அனைத்து நடிகர், நடிகைகளையும் உடல் பரிசோதனை செய்ய வேண்டுமென தமிழக முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரையுலகில் அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், நடிகர் விஜய்யின் வீட்டில் நடக்கும் பார்ட்டிகளில் தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். போதைப்பொருளை நாட்டு மக்களிடையோ, இளைஞர்களிடையோ விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய கலைத்துறையினர் கொக்கைன் என்ற கொடிய போதைப்பொருளுக்கு […]

You May Like